EBM News Tamil
Leading News Portal in Tamil

இந்தி நடிகர் ஜூனியர் மெஹ்மூத் மறைவு – பிரபலங்கள் இரங்கல் | Veteran actor Junior Mehmood dies due to stomach cancer


மும்பை: ’கேரவன்’, ‘ஹாத்தி மேரே சாத்தி’ உள்ளிட்ட பல்வேறு இந்தி படங்களில் நடித்த ஜூனியர் மெஹ்மூத் காலமானார். அவருக்கு வயது 67.

இந்தி சினிமாவில் பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் ஜூனியர் மெஹ்மூத். ராஜ் கபூரின் ‘மேரா நாம் ஜோக்கர்’, ராஜேஷ் கண்ணாவின் ‘ஹாத்தி மேரே சாத்தி’, ‘கட்டி பட்டாங்’, ‘கேரவன்’ உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் மெஹ்மூத் நடித்துள்ளார். இவரது இயற்பெயர் நயீம் சயீத்.

கடந்த சில தினங்களாக குடல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர், இன்று (டிச.08) அதிகாலை 2 மணியளவில் மும்பையில் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மெஹ்மூதின் மறைவுக்கு இந்தி திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்பு, உடல்நிலை சரியில்லாத நிலையில் தன்னுடன் சேர்ந்து நடித்த நடிகர்கள் ஜீதேந்திரா மற்றும் சச்சின் பில்கோன்கர் ஆகியோரை சந்திக்க வேண்டும் என்று ஜூனியர் மெஹ்மூத் விருப்பம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அவர்கள் இருவரும் மெஹ்மூதை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.