EBM News Tamil
Leading News Portal in Tamil

கிருத்திகா உதயநிதி இயக்கும் ‘காதலிக்க நேரமில்லை’ | kadhalikka neramillai by kiruthika udhayanidhi


சென்னை: சிவா, பிரியா ஆனந்த் நடித்த ‘வணக்கம் சென்னை’ படம் மூலம் இயக்குநர் ஆனவர் கிருத்திகா உதயநிதி. அடுத்து விஜய் ஆண்டனி நடித்த ‘காளி’, ‘பேப்பர் ராக்கெட்’ என்ற வெப்தொடர் ஆகியவற்றை இயக்கினார். அடுத்து அவர் இயக்கும் படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் ஜோடியாக நடித்துள்ளனர். யோகிபாபு, டி.ஜே.பானு, ஜான் கொக்கைன் உட்பட பலர் நடிக்கின்றனர். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்துக்கு ‘காதலிக்க நேரமில்லை’ என பெயர் வைத்துள்ளனர். தமிழில் இதற்கு முன் ஸ்ரீதர் இயக்கத்தில் 1964-ம் ஆண்டு இதே தலைப்பில் படம் வெளியாகி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. ரொமான்ஸ் படமான இதன் இரண்டு ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. பாடல் காட்சிகள் மட்டுமே பாக்கி இருக்கிறது. அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது