தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ முதல் சிங்கிள் புதன்கிழமை வெளியீடு | First single Killer Killer from Captain Miller Releasing on November 22
சென்னை: தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் முதல் சிங்கிளான ‘கில்லர் கில்லர்’ புதன்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சாணிக்காயிதம்’, ‘ராக்கி’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் ‘கேப்டன் மில்லர்’. பீரியட் படமாக உருவாகும் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடித்துள்ளார்.
சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கேன் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த ஆறு மாதங்களாக இப்படத்தில் நடித்து வந்த அவருக்கான படப்பிடிப்பு ஜூலை 19-ம் தேதியுடன் நிறைவடைந்தது. படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘கில்லர் கில்லர்’ பாடல் வரும் நவம்பர் 22-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பாடல் வரிகளை கேபர் வாசுகி எழுதியுள்ளார். இந்தப் பாடலை தனுஷ் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Get ready folks ! @gvprakash x @dhanushkraja all set to drop a Banger
First single Killer Killer from #CaptainMiller ,Releasing on November 22nd (Wednesday)
Lyrics @kabervasuki @ArunMatheswaran @NimmaShivanna @sundeepkishan @priyankaamohan @saregamasouth pic.twitter.com/FnTb39TxVH