EBM News Tamil
Leading News Portal in Tamil

‘சில நொடிகளில்’ படத்தில் 4 இசை அமைப்பாளர்கள் | 4 composers for sila nodigalil


சென்னை: வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘சில நொடிகளில்’. வரும் 24-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

படம் பற்றி இயக்குநர் வினய் பரத்வாஜ் கூறும்போது, “இது என் முதல் தமிழ்ப் படம். இந்தப் படம் முழுவதையும் லண்டனில் படமாக்கினோம். 35 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தினோம். வழக்கமான த்ரில்லர் கதைகளைப் போல் இல்லாமல் வித்தியாசமான ஒன்றாக இருக்க வேண்டும் என்று இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறேன். த்ரில்லர், மிஸ்ட்ரி, காதல் என எல்லாம் இதில் உண்டு. இசை எனக்குப் பிடிக்கும். அதனால்தான் நான்கு இசையமைப்பாளர்கள் இதில் இசை அமைத்துள்ளனர். வித்தியாசமான யாஷிகாவை இதில் ரசிகர்கள் பார்ப்பார் கள். நடிகர் ரிச்சார்ட் பழகுவதற்கு எளிமையானவர். இந்தப் படத்தில் சிறந்த நடிப்பை வழங்கி இருக்கிறார்” என்றார். இயக்குநர் மோகன்.ஜி உட்பட பலர் கலந்துகொண்டனர்