EBM News Tamil
Leading News Portal in Tamil

‘தங்கலானில்’ சவாலான கேரக்டர்: மாளவிகா மோகனன் | challenging character in thangalan says malavika mohanan


சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘தங்கலான்’. பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டஜிரோனோ உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கோலார் தங்க வயல் பின்னணியில், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் உருவாக்கியுள்ளது. ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

இந்நிலையில் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு நடிகை மாளவிகா மோகனன் பதிலளித்தார். அப்போது ஒருவர், தங்கலான் கேரக்டர் பற்றி கேட்டபோது, “இதுவரை நான் நடித்ததில் எனக்குச் சவாலான கேரக்டர் தங்கலானில் கிடைத்துள்ளது. இதில் எனது கதாபாத்திரமும் நடிப்பும் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். படத்தின் ரிலீஸ் தேதி குறித்து எனக்குத் தெரியாது. அதை இயக்குநர் ரஞ்சித்திடம்தான் கேட்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இந்தப் படத்துக்காக மாளவிகாவுக்கு 5 மணி நேரம் மேக்கப் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.