EBM News Tamil
Leading News Portal in Tamil

சின்னத்திரையில் மீண்டும் ரம்யா கிருஷ்ணன்


நடிகை ரம்யா கிருஷ்ணன், திரைப்படங்கள் மட்டுமின்றி சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். இதற்கு முன் தங்கம், ராஜகுமாரி, வம்சம் உள்ளிட்டதொடர்களில் நடித்திருந்த அவர், கடந்த சில வருடங்களாக சின்னத்திரையில் நடிக்கவில்லை. ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்திருந்த அவர், இப்போது மீண்டும் சின்னத்திரையில் களமிறங்கி இருக்கிறார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அக். 9-ம்தேதி முதல் தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள தொடர் ‘நளதமயந்தி’. பிரியங்கா நல்காரி நாயகியாக நடிக்க, நந்தா மாஸ்டர் ஹீரோவாக நடிக்கிறார். இதில் முக்கிய கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். இவர் தொடர்பான புரமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், நடிகை ரம்யா கிருஷ்ணன் அம்மனாக வந்து எச்சரிக்கும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.