Last Updated : 01 Oct, 2023 12:53 PM
Published : 01 Oct 2023 12:53 PM
Last Updated : 01 Oct 2023 12:53 PM

விஜய் தொலைக்காட்சியில் ராதிகா சரத்குமார் மற்றும் இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் நடுவர்களாகப் பங்கு பெற்ற நிகழ்ச்சி ‘கதாநாயகி’. கதாநாயகிகளைச் சின்னத்திரையில் அறிமுகப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்டது.
நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்த பல இளம் பெண்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதில் சிலர் தேர்வாகி இருந்தனர். அவர்களில் 8 முன்னணி போட்டியாளர்கள் ஒரு பகுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்தடுத்த ‘டாஸ்க்’ கொடுக்கப்பட்டது.
இதில் வெற்றி பெறுபவர்கள் விஜய் தொலைக்காட்சியின் அடுத்த நிகழ்ச்சியில் ‘கதாநாயகி’யாகத் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சி இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதன் இறுதி நிகழ்ச்சி இன்று (ஞாயிறு) மாலை 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதில் வெற்றியாளர் யார் என அறிவிக்கப்பட இருக்கிறார்கள். இதற்கிடையே இந்த நிகழ்ச்சியில் ‘கதாநாயகி’ பட்டத்தை இரட்டை சகோதரிகளான ரூபினா மற்றும் ரூபிசீனா பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
தவறவிடாதீர்!