உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் ‘ஜெயிலர்’ பார்க்கும் நடிகர் ரஜினி | Rajinikanth To Watch His Latest Film Jailer With Yogi Aditynath Tomorrow
லக்னோ: உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் இணைந்து ‘ஜெயிலர்’ படத்தை பார்க்க இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக லக்னோ விமானநிலையத்துக்கு வந்த நடிகர் ரஜினிகாந்திடம், “நாளை முதல்வர் யோகி ஆதியநாத்துடனான சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் இணைந்து ‘ஜெயிலர்’ படம் பார்க்க இருக்கிறேன்” எனத் தெரிவித்தார். மேலும், படத்துக்கான வரவேற்பு குறித்து கேட்டதற்கு, “எல்லாம் இறைவன் அருள்” எனக் கூறினார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரம்யாகிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவராஜ்குமார், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் உலக அளவில் ரூ.400 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. படம் வெளியாவதற்கு முந்தைய நாள் நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்குச் சென்றார். இதையடுத்து இன்று லக்னோ வந்தடைந்தவர் நாளை முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் இணைந்து படத்தை பார்க்க உள்ளார்.
#WATCH | Actor Rajinikanth arrives in Uttar Pradesh’s Lucknow, says, “I will watch the film (Jailor) with the CM”. pic.twitter.com/wsBdkosu18
— ANI (@ANI) August 18, 2023