சென்னை: ‘சில நேரங்களில் சில மனிதர்கள்', 'செம்பி' படங்களைத் தொடர்ந்து ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிக்கும் படம், 'லெவன்'. புலனாய்வு திரில்லர் படமான இதை, லோகேஷ் அஜில்ஸ் இயக்குகிறார். டி. இமான் இசை அமைக்கிறார். கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்கிறார். நவீன் சந்திரா ஹீரோவாக நடிக்கும் இதன் பூஜை சென்னையில் நடந்தது.
படம் பற்றி லோகேஷ் அஜில்ஸ் கூறும்போது, “இது விறுவிறுப்பான புலனாய்வு த்ரில்லர் படம். ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும் பரபரப்புடன் திரைக்கதை இருக்கும். அனைவரையும் கவரும் வகையில் இந்தத் திரைப்படம் அமையும்" என்றார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இதன் படப்பிடிப்பு வரும் 23-ம் தேதி முழு வீச்சில் தொடங்குகிறது.