EBM News Tamil
Leading News Portal in Tamil

என்டிஆரின் ‘தேவரா’ பட சைஃப் அலிகான் லுக் வெளியீடு | jr ntr starrer Devara movie Saif Ali Khan look and poster released


Last Updated : 16 Aug, 2023 03:12 PM

Published : 16 Aug 2023 03:12 PM
Last Updated : 16 Aug 2023 03:12 PM

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானின் பிறந்த நாளையொட்டி ‘தேவரா’ படத்தில் நடிக்கும் அவரின் கதாபாத்திரத் தோற்றம் மற்றும் பெயரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் ஜூனியர் என்டிஆர் ‘ஆச்சார்யா’ படத்தை இயக்கிய இயக்குநர் கொரட்டலா சிவாவுடன் இணைந்துள்ளார். இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கிறார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார். பிரகாஷ்ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் பணிகள் பூஜையுடன் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கின. இப்படத்தில் பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது பிறந்த நாளையொட்டி அவரது கதாபாத்திர தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. தோற்றத்தை பொறுத்தவரை தாடி மற்றும் நீளமான முடியுடன் புதிய கெட்டப்பில் கவனம் பெறுகிறார். மேலும் அவரது கதாபாத்திரத்துக்கு ‘பைரா’ என பெயரிடப்பட்டுள்ளது. படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தவறவிடாதீர்!