EBM News Tamil
Leading News Portal in Tamil

“இதுதான் என் ரொமான்டிக் லுக்” – விஜய் ஆண்டனியின் சர்ப்ரைஸ் போஸ்டர் | Vijay Antony next Romeo to be bankrolled by his new production house


சென்னை: விஜய் ஆண்டனி அடுத்து தான் நடிக்க போகும் புதிய ரொமான்டிக் ஜானர் கதைக்களம் கொண்ட படத்தின் போஸ்டரை வெளியிட்டு அவரது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

‘பிச்சைக்காரன் 2’, ‘கொலை’ படங்களைத் தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனி புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். ‘ரோமியோ’ (Romeo) என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் நாயகியாக மிருணாளினி ரவி நடிக்கிறார். படத்தை விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார். யூடியூப்பில் ‘காதல் டிஸ்டன்ஸிங்’ என்ற தொடரை இயக்கிய இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் படத்தை இயக்குகிறார். பரத் தனசேகர் இசையமைக்கும் படத்தின் படப்பிடிப்பு மலேசியா, பாங்காக், ஹைதராபாத், பெங்களூர், தென்காசி மற்றும் மகாபலிபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.

விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், சுதா உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகிறது. ரொமான்டிக் காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இப்படத்துக்கான போஸ்டரை விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னை ரொமான்டிக் ஹீரோவா பார்க்க ஆசைப்பட்ட மக்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடகவியல் நண்பர்களுக்கும் நன்றி. உங்கள் வேண்டுதல் பலித்துவிட்டது” என பதிவிட்டுள்ளார். ரிச் லுக்குடன் கூடிய போஸ்டர் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. படம் அடுத்த ஆண்டு கோடையில் வெளியாக உள்ளது.