EBM News Tamil
Leading News Portal in Tamil

‘‘சந்திரமுகியோட பெஸ்ட் ஃப்ரண்டு” – ‘சந்திரமுகி 2’ வடிவேலு டப்பிங் வீடியோ வைரல் | Chandramukhi 2 movie vadivelu dubbing video gone viral


சென்னை: ‘சந்திரமுகி 2’ படத்துக்கான டப்பிங் பணிகளை நடிகர் வடிவேலு தொடங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பி.வாசு இயக்கத்தில், 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம், ‘சந்திரமுகி’. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகம் ‘சந்திரமுகி 2’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடிக்கின்றனர்.

லைகா தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு மைசூரு, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்தாக படக் குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். தற்போது படத்தின் டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், வடிவேலுவுக்கான டப்பிங் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள வீடியோவில், “சந்திரமுகி பார்ட் 1, பார்ட் 2, பார்ட் 3… 10 வரைக்கும் எடுத்தாலும் சந்திரமுகி பெஸ்ட் ஃபரண்டு நான் தான்டா..” என வடிவேலு பேசுகிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

முன்னதாக ‘மாமன்னன்’ படத்தில் முற்றிலும் வேறொரு வடிவேலுவை ரசிகர்கள் பார்த்தனர். தற்போது மீண்டும் காமெடி வடிவேலுவை இந்தப் படத்தில் ரசிகர்கள் பார்க்க உள்ளனர். படம் செப்டம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.