EBM News Tamil
Leading News Portal in Tamil

இயக்குநர் ஆனார் திஷா பதானி


மும்பை: பிரபல இந்தி நடிகை திஷா பதானி. புரி ஜெகநாத் இயக்கிய லோஃபர் என்ற தெலுங்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், இப்போது இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் தமிழில் சூர்யாவின் ‘கங்குவா’ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை சிவா இயக்கி வருகிறார். அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ் நடிக்கும் ‘கல்கி 2829 ஏடி’படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவர் இப்போது இயக்குநர் ஆகி இருக்கிறார். ‘கியூன் கரு ஃபிக்கர்- கேர்ஸ் ஆன்தம் 23’ என்ற இசை ஆல்பத்தை இயக்கியுள்ளார். அதோடு அதில் அவர் நடனமாடியும் உள்ளார். வைபவ் பானி இசை அமைத்துள்ள இந்த ஆல்பத்தின் டீஸர் இன்று வெளியாகிறது. பாடல் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

Source : www.hindutamil.in