உலகம் முழுவதும் ரூ.400 கோடி வசூலைத் தாண்டிய ரஜினியின் ‘ஜெயிலர்’ | Rajinikanth starrer jailer crossed 400 cr mark worldwide
Last Updated : 16 Aug, 2023 08:47 AM
Published : 16 Aug 2023 08:47 AM
Last Updated : 16 Aug 2023 08:47 AM

சென்னை: ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.400 கோடியை தாண்டி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளனர். இதில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மோகன்லால், சிவராஜ்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். கடந்த 10ம் தேதி வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. வெளியான முதல் நாளில் இருந்தே வசூலில் சாதனைப் படைத்து வருகிறது.
இந்த நிலையில் இப்படம் வெளியான ஆறு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.400 கோடியைத் தாண்டி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் இப்படம் ரூ.200 கோடியைத் தாண்டி வசூலித்துள்ளது. சுதந்திர தினமான நேற்று (ஆகஸ்ட் 15) ‘ஜெயிலர்’ படம் நாடு முழுவதும் ரூ.33 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கேரளாவில் இப்படம் இதுவரை ரூ.30 கோடி வசூலித்துள்ளது. தமிழகத்தில் இப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவறவிடாதீர்!