சூர்யா, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் ‘வணங்கான்’ படத்தை இயக்குநர் பாலா தொடங்கினார். கன்னியாகுமரியில் இதன் முதல் ஷெட்யூல் தொடங்கிய நிலையில், பாலாவுக்கும் சூர்யாவுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. பின்னர் படத்தில் இருந்து சூர்யா விலகினார்.
‘இந்தக் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், சூர்யாவுக்கு இது உகந்ததாக இருக்குமா என்ற ஐயம் ஏற்பட்டது. இதனால் இந்தப் படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என ஒருமனதாக முடிவெடுத்துள்ளோம்’ என்று இயக்குநர் பாலா அறிக்கை மூலம் தெரிவித்தார்.