பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத், ‘கே.ஜி.எஃப் 2’ படம் மூலம் தென்னிந்திய சினிமாவுக்கு வந்தார். இப்போது விஜய்யின் ‘லியோ’ படத்தில் நடித்துள்ளார். அடுத்து, ராம் பொத்தினேனி நடிக்கும் ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் இரண்டாவது ஷெட்யூல் தாய்லாந்தில் நடந்து வருகிறது.
கடந்த வாரம் மும்பையில் நடந்த இதன் படப்பிடிப்பில் சஞ்சய் தத் காயமடைந்துள்ளார்.