விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்துள்ள படம், குஷி. சச்சின் கெடகர், சரண்யா, முரளி சர்மா, லக்ஷ்மி, ரோகிணி உட்பட பலர் நடித்துள்ளனர். ஷிவா நிர்வாணா இயக்கியுள்ள இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். முரளி ஒளிப்பதிவு செய்துள்ளார். செப். 1-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடந்தது. விழாவில், செய்தியாளர்களிடம் விஜய் தேவரகொண்டா கூறியதாவது:
இந்தப் படம், திருமணம் குறித்தும், குடும்ப அமைப்பின் மதிப்பு குறித்தும் சுவாரசியமாகப் பேசுகிறது. தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாகிறது. இதற்கு முன், பான் இந்தியா முறையில் வெற்றிபெற்ற படங்கள் ஆக்‌ஷன் படங்களாகத்தான் இருக்கின்றன. இது காதல் படம்தானே? என்று கேட்கிறார்கள். காதல் என்பது எல்லோருக்குமான உணர்வுதான்.