EBM News Tamil
Leading News Portal in Tamil

ஷாருக்கானின் ‘ஜவான்’ பட ‘ஹையோடா’ பாடல் எப்படி? | Shahrukh Khan Nayanthara starrer Jawan movie Hayyoda song released


ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ படத்தின் ‘ஹையோடா’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தியில் இப்பாடல் ‘சலேயா’ என தொடங்குகிறது.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, பிரியாமணி, சானியா மல்ஹோத்ரா, அமிர்தா ஐயர் உட்பட பலர் நடித்துள்ளனர். தீபிகா படுகோன் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படம் செப்.7-ம் தேதி வெளியாகிறது. படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் ஷாருக்கான் மனைவி கவுரிகான் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தின் முதல் பாடலான ‘வந்த இடம்’ கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ரூ.15 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் பாடலில் ஆயிரத்துக்கும் அதிகமானப் பெண் நடனக் கலைஞர்கள் நடனமாடினர். இந்நிலையில், இந்தப் படத்தின் அடுத்த பாடலான ‘ஹையோடா’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

பாடல் எப்படி?: தமிழில் இப்பாடலை அனிருத்தும், பிரபல பாடகி பிரியா மாலியும் பாடியுள்ளனர். மும்பை அருகே நான்கைந்து இடங்களில் பிரம்மாண்ட செட் அமைத்து இந்தப் பாடல் காட்சியைப் படமாக்கியுள்ளனர். பிரபல நடன இயக்குநரும் திரைப்பட இயக்குநருமான ஃபாரா கான், இந்தப் பாடலுக்கான நடனத்தை அமைத்துள்ளார். இந்தியில் ‘சலேயா’ (Chaleya) என்று தொடங்கும் பாடலை அர்ஜித் சிங்-ஷில்பா ராவ் இணைந்து பாடியுள்ளனர். ரொமான்டிக் பாடலாக இப்பாடல் உருவாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஷாருக்கான் இந்தப் படத்துக்காக ரொமான்டிக் பாடலில் பங்கேற்றுள்ளார். நயன்தாரா – ஷாருக்கான் இடையேயான கெமிஸ்ட்ரி கைகொடுக்கிறது. ஆனால், தமிழில் இப்பாடலுக்கான லிப் சிங் ஒட்டாமல் டப்பிங் பாடல் கேட்கும் உணர்வு அப்பட்டமாக தெரிகிறது. பாடல் வீடியோ: