EBM News Tamil
Leading News Portal in Tamil

அனுஷ்காவின் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ செப்.7-ல் ரிலீஸ்


ஹைதராபாத்: நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' திரைப்படம் செப்டம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் அனுஷ்கா. 2020-ஆம் ஆண்டு வெளியான ‘நிசப்தம்’ படத்துக்குப் பிறகு எந்தப் படத்திலும் அனுஷ்கா நடிக்கவில்லை. உடல் பருமன் காரணமாக அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததாக சொல்லப்பட்டது.