பொன்னியின் செல்வனில் குறைவான காட்சி ஏன்? – நடிகர் நாசர் விளக்கம் | Why less scene in Ponniyin Selvan actor Nasser explains
‘பொன்னியின் செல்வன்’ படத்தில் என் காட்சிகள் அதிகமாக இருந்திருக்க வேண்டும் என்று நடிகர் நாசர் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:
‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வீரபாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்தேன். அது முக்கியமான கேரக்டர் என்றாலும் அதில் எனதுகாட்சிகள் குறைவுதான். இன்னும்அதிகமாக இருந்திருக்க வேண்டும். ஐந்து, ஆறு நாட்கள் நான் நடிக்க வேண்டியிருந்தது. அது பெரிய படம் என்பதால் துரதிர்ஷ்டவசமாக ஷெட்யூல் மாற்றி அமைக்கப்பட்டது.
அவர்கள் மீண்டும் அழைத்தபோது என்னால் கால்ஷீட் கொடுக்க முடியாத நிலை இருந்தது. நான் வேறு படத்தில் இருந்தேன். இதனால் ஒரே நாளில் என் காட்சிகள் படமாக்கப் பட்டன. மணிரத்னம் படங்களில் நான்தொடர்ந்து நடிப்பது பற்றி கேட்கிறீர்கள். இருவருக்கும் நல்ல நட்பு இருந்தாலும் நட்புக்காக, படங்களில் நடிக்க அழைக்க மாட்டார். அவர் வைத்திருக்கிற கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருந்தால் மட்டுமே அழைப்பார். அவர் படங்களில் தொடர்ந்து நடிப்பதால்நான் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். எனது சிறந்த படங்களைப் பார்த்தால், அதில் பெரும்பாலானவை கமல்ஹாசன், மணிரத்னம் படங்களாகவே இருக்கும். இவ்வாறு நாசர் தெரிவித்துள்ளார்