EBM News Tamil
Leading News Portal in Tamil

நடிகர் டோவினோ தாமஸ் போலீஸில் புகார்


பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ். இவர் தமிழில் ‘மாரி 2’, ‘மின்னல் முரளி’ படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்து கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான ‘2018’ படம் வரவேற்பைப் பெற்றது. இப்போது ‘நடிகர் திலகம்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமூக வலைதளப் பக்கத்தில் தொடர்ந்து சிலர், தன்னைத் தகாத வார்த்தைகளால் துஷ்பிரயோகம் செய்து அவதூறு பரப்பி வருவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கொச்சி காவல் உதவி ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அவதூறு பரப்பிய சமூக வலைதளப்பக்கத்தின் லிங்க்கையும் அவர் புகாரில் இணைத்துள்ளார். வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்