“உனக்கும் எனக்கும் இருக்கும் பழக்கம் ஒரு படம் தானா என விஜய் கேட்டார்” – ‘பீஸ்ட்’ குறித்து நெல்சன் | director nelson revealed what vijay sadi after beast negative reviews
சென்னை: “உனக்கும் எனக்கும் இருக்கும் பழக்கம் ஒரு படம் தானா என விஜய் கேட்டார்” என ‘பீஸ்ட்’ பட தோல்வி குறித்து இயக்குநர் நெல்சன் பேசியுள்ளார்.
இது தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ‘பீஸ்ட்’ விமர்சனங்களைத் தொடர்ந்து நடிகர் விஜய்யிடம் ‘சார் என் மேல உங்களுக்கு எதும் கோபமா?’ எனக் கேட்டேன். அதற்கு அவர், “படம் எடுத்தோம். சிலருக்கு பிடித்திருக்கிறது. சிலருக்குப் பிடிக்கவில்லை. நேர்மையான உழைப்பை செலுத்தினோம்.
என்னிடம் சொன்னதை படமாக எடுத்திருக்கிறாய். அவ்ளோதான். அடுத்த முறை வேறுமாதிரி படம் பண்லாம். நான் எதுக்கு உன் மீது கோபமாக இருக்கப் போகிறேன்?. உனக்கும் எனக்கும் இருக்கும் பழக்கம் ஒரு படம் தானா? நீ இப்படி என்னிடம் கேட்பது கஷ்டமாக உள்ளது. இது இல்லாவிட்டால் இன்னொரு படம் எடுக்கப் போகிறோம். அவ்ளோ தான். ஜெயிலர் வந்ததும் முதலில் அவர் தான் என்னைப் பாராட்டினார். வாழ்த்து தெரிவித்தார்” என நெல்சன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.