திரையுலகில் 45 வருடம்: கேக் வெட்டி கொண்டாடிய நடிகை ராதிகா | actress radhika celebrate her 45 years of cinema journey
பாரதிராஜா இயக்கத்தில் 1978-ம் வருடம் வெளியான ‘கிழக்கே போகும் ரயில்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ராதிகா. இந்தப் படம் வெளியாகி 45 வருடமானதை ஒட்டி, தனது கணவர் சரத்குமாருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
80 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ராதிகா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன், விஜயகாந்த், சரத்குமார் என அப்போதைய முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடியாக நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளிலும் நடித்துள்ள ராதிகா, சின்னத்திரையிலும் ஜொலித்து வருகிறார்.
திரையுலகில் 45 வருடங்களை நிறைவு செய்துள்ள ராதிகாவுக்கு ரசிகர்களும் திரையுலகினரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.