சென்னை: சென்னையின் புறநகர் பகுதிகளில் மேய்ச்சலில் உள்ள ஆடுகளை காரில் வந்து நோட்டம் விடும் சகோதார்கள், மேய்ச்சலில் உள்ளவர் அசந்து இருக்கும் நேரத்தில் இரண்டு ஆடுகள், அல்லது ஒரு ஆட்டை அப்படியே தூக்கி கொண்டு ஓடிவிடுவார்கள். இப்படி திருடிய பணத்தில், சினிமா படம் எடுத்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தவர்கள் அண்மையில் சிசிடிவி காட்சியால் மாதவரத்தில் போலீசாரிடம் சிக்கினர்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை ஆண்டியப்பன் 2வது தெருவை சேர்ந்த நிரஞ்சன்(36) மற்றும் அவரது சகோதரர் லெனின்குமார்(32). இவர்கள் இருவரும் சென்னையின் புறநகர் பகுதிகளான மாதவரம், மீஞ்சூர், பொன்னேரி, செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் காரில் வருவார்கள்.
அப்படியே வந்து நோட்டமிட்டு மேய்ச்சலில் உள்ள ஆடுகளை திருடி காரில் தூக்கிப்போட்டு சென்று விற்பார்க்ள். இந்த திருட்டு தொழிலை கடந்த 3 வருடங்களாக செய்து வந்திருக்கிறார்கள்.