இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம் கண்ட வர்த்தகம்..!
இந்தியாவிலும் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. இதைத் தொடர்ந்து நாளுக்கு நாள் இந்திய பங்குச்சந்தைகள் மீண்டும் ஏற்றம் கண்டு வருகின்றன.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 871 புள்ளிகள் உயர்ந்து 30,765ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 242 புள்ளிகள் உயர்ந்து 9 ஆயிரத்தை தொட்டது. மருந்து நிறுவனங்கள், உலோக தொழில் நிறுவனங்கள், வாகன தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள் 5 விழுக்காடு முதல் 14 விழுக்காடு வரை உயர்ந்தது.