கொரோனா அமெரிக்காவ அடிச்சா, இந்தியாவுக்கு வலிக்கும்! எப்படி? ஏன்?
உலகிலேயே தற்போது அமெரிக்காவில் தான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அதிகம் இருக்கிறார்கள். சுமார் 2.77 லட்சம் அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அமெரிக்கர்களை கொரோனா பாதிப்பில் இருந்து காப்பாற்ற, அமெரிக்க அரசு சுமாராக 2.2 ட்ரில்லியன் டாலர் (சுமாராக 150 லட்சம் கோடி ரூபாய்) உதவித் தொகைகளை அறிவித்து இருக்கிறார்கள்.
இப்படி உலகின் மிகப் பெரிய மற்றும் சக்தி வாய்ந்த அமெரிக்க பொருளாதாரமே இயங்க முடியாமல், உதவித் தொகையை நம்பி இருப்பது ஒரு பக்கம் வருத்தம் என்றாலும், மறு பக்கம் இந்தியாவை அது பெரிய அளவில் பாதிக்கும்.
அப்படி அமெரிக்க பொருளாதாரம், கொடிய கொரோனா வைரஸ் தாக்குதால் பாதிக்கப்பட்டுவதால், இந்தியப் பொருளாதாரம் எப்படி பாதிக்கப்படும்? இந்த இரண்டு பொருளாதாரங்களுக்கு மத்தியில் இருக்கும் பெரிய தொடர்பு என்ன..? இந்திய பொருளாதாரத்தில் என்ன மாதிரியான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.
அமெரிக்கா கொரோனா வைரஸால் எவ்வளவு அதிகம் பாதிக்கபப்டுகிறதோ, அந்த அளவுக்கு அமெரிக்காவுக்கு, இந்தியா ஏற்றுமதி செய்வது குறையலாம். இது எல்லா நாடுகளுக்கும் பொருந்துமே? பொதுவாக உலக பொருளாதாரம் சரி இல்லாத போது பல நாடுகள் பெரிய அளவில் இறக்குமதியை (இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள்) குறையத் தானே செய்யும், எப்படி அமெரிக்காவுக்கு செய்யப்படும் ஏற்றுமதி மட்டும் அதிகம் பாதிக்கப்படும்? என்று கேட்கிறீர்களா.