EBM News Tamil
Leading News Portal in Tamil

எந்த வரி வரம்பு பெஸ்ட்? ஏன்? விடை தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்?

இந்த பட்ஜெட் 2020 – 21-ல் தான் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய வருமான வரி வரம்புகளைக் கொண்டு வந்தார்.

இந்த புதிய வருமான வரி வரம்பில் பல வருமான வரிச் சலுகைகளை பயன்படுத்திக் கொள்ள முடியாது, ஆனால் வரியும் குறைவாக இருக்கும் எனச் சொன்னார்கள்.

எதை எல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம், எதை பயன்படுத்தக் கூடாது என்பதை விளக்கினால் குழப்பம் அதிகரிக்கலாம்.
எனவே, 60 வயதுக்கு உட்பட்ட, சாதாரன குடிமகனுக்கு வரும் பல தரப்பட்ட வருமானத்தில், 2 லட்சம் ரூபாய் வருமான வரிக் கழிவை (80C, 80D, 80G… என எல்லா வரிச் சலுகைகளும் அடங்கும்) முழுமையாக பயன்படுத்திக் கொள்கிறார் என வைத்துக் கொள்வோம். இப்போது புதிய வருமான வரி வரம்பா அல்லது பழைய வருமான வரி வரம்பா..? எது பெஸ்ட் எனப் பார்க்கப் போகிறோம். இதில் எவ்வளவு வரி (வரி + செஸ்) செலுத்த வேண்டி இருக்கும் என்பதையும் பார்ப்போம்.

பழைய வருமான வரி வரம்பு
1 ரூபாய் முதல் 2.5 லட்சம் ரூபாய் வரை 0 % வரி

2.5 லட்சம் முதல் 5.0 லட்சம் வரை 5 % வரி

5.0 லட்சம் முதல் 10 லட்சம் வரை 20 % வரி

10 லட்சத்துக்கு மேல் 30 % வரி செலுத்த வேண்டும் என வரம்புகள் இருக்கின்றன.