EBM News Tamil
Leading News Portal in Tamil

செய்தி துறையில் 45 லட்சம் டாலர் முதலீடு: பேஸ்புக் அறிவிப்பு

சர்வதேச அளவில் செய்தித்துறை செயல்பாடுகளை மேம்படுத்த கூடு தலாக 45 லட்சம் டாலரை பேஸ்புக் முதலீடு செய்ய உள்ளது. இது தொடர்பாக பேஸ்புக் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில் பேஸ்புக் நிறுவனம் 500 கோடி டாலர் லாபம் ஈட்டியுள் ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் செய்தி திரட்டுக்காக 45 லட்சம் டாலர் செலவிட உள்ளது. பேஸ்புக் உறுப்பினர்களுக்கான செய்தி வழங்குவதற்காக மூன்று மாத வடிவமைப்பு திட்டத்திற்காக இது செலவிடப்படும்.
இந்த உடனடி செயல்பாட்டுத் திட்டத்தில், செய்திகளை வெளியிடு பவர்களுக்கு தொடர் பயிற்சி அளிக் கப்படும். பயிற்சி இந்த ஆண்டு இறுதியில் முடிவடையும். 2019-ம் ஆண்டிலிருந்து இந்த செய்தியை அளிப்பதற்கான முனைப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்று பேஸ்புக் செய்திகள் பிரிவின் சர்வதேச தலைவர் கேம்பெல் பிரவுன் கூறியுள்ளார்.
பேஸ்புக் நிறுவனம் `நியூஸ் மேட்ச்’ என்கிற செய்தி பிரசாரத் துக்காக 2018-ம் ஆண்டில் 10 லட் சம் டாலர் செலவிட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த பிரசாரத் தில் நாடு முழுவதும் நூற்றுக் கும் மேற்பட்ட வருமானம் இல்லாத செய்திநிறுவனங்கள் (newsrooms) செய்தி அளித்து வருகின்றன.
கடந்த ஆண்டில் மேற்கொள்ளப் பட்ட இந்த செய்தி இயக்கத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்ததால் 2018-ம் ஆண்டுக்கும் இதை நீட்டித்துள்ளோம் என்று பிரவுன் கூறினார்.
பேஸ்புக் உறுப்பினர்கள் ஆக்ஸிலரேட்டர் என்கிற இந்த செய்தி பிரசாரத்தில் உள்ளூர் அளவில் வருமானம் இல்லாத செய்தியாளர்கள் உதவி செய்து வருகின்றனர். தனிப்பட்ட முறையில் செய்திகளை அளிக்கின்றனர். பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு இந்த செய்திகள் கிடைக்கும்.
உள்ளூர் செய்திகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பேஸ்புக் இந்த முயற்சியினை மேற்கொண்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த சந்தாதாரர் செய்தி முறையை சோதனை செய்துள்ளோம். இதை மேலும் வளர்க்கும் விதமான நட வடிக்கைகளை மேற்கொண்டுள் ளோம். பேஸ்புக் மூலம் உறுப் பினர்களாகும் சந்தாதாரர்களுக்கு இந்த செய்திகள் கொண்டு செல்லப்படும் என்றார்
இதற்காக முதலில் சென்னை யைச் சேர்ந்த ஆசியன் ஸ்கூல் ஆஃப் ஜர்னலிசம் கல்லூரி யுடன் ஒப்பந்தம் மேற்கொண் டுள்ளது.