‘காக்டெயில்’ இறால், ஆக்டோபஸ், கெராபு : அதிபர் டிரம்ப், அதிபர் கிம் விருந்தில் அமர்க்கள உணவுகள்
அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் ஆகியோருக்கு இடையிலான மதிய உணவு கொரிய, மலாய், மற்றும் மேற்கத்திய வகைகளில் தயார் செய்யப்பட்டு இருந்தன.
வடகொரிய அதிபர் கிம் ஜாங், அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் இடையிலான வரலாற்றுச் சிறப்பு மிகுந்த பேச்சு சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் உள்ள கேப்பெலா ஹோட்டலில் இன்று நடந்தது.
அதிபர் டிரம்ப், அதிபர் கிம்முக்கு இடையிலான பேச்சு நடக்குமா என்று உலகமே உற்றுநோக்கிய இந்தச் சந்திப்பு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதில் இரு தலைவர்களுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.
இந்நிலையில், காலையில் நடந்த சந்திப்புக்குப் பின், இரு தலைவர்களுக்கும் மிகப் பிரமாண்டமான முறையில் மதிய உணவு தயார் செய்யப்பட்டு இருந்தது. மேற்கத்திய, கொரிய மற்றும் மலாய் கலாச்சாரம் கலந்த உணவுகள் தயார் செய்யப்பட்டு இருந்தன.
அதில் குறிப்பாக கொரிய நாட்டு ஸ்டப்டு குக்கும்பர் (வெள்ளரி), ஆக்டோபஸ், காக்டெயில் இறால், பிரெஞ்சு பாஸ்டரிஸ், பலவகையான ஐஸ்க்ரீம்கள் முக்கியமானவை.
இரு தலைவர்களும் சாப்பிடும் முன்பாக அவர்களுக்கு வழங்க ‘ஸ்டார்ட் அப்’ வழங்க கிரீன் மேங்கோ கெராபு, எலுமிச்சை மற்றும் ஆக்டோபஸ் கலந்த ஜூஸ் தயார் செய்யப்பட்டிருந்தது.
மதிய உணவில் முக்கியமாக கெராபு எனச் செல்லப்படும் சாதம் இடம் பெற்றிருந்தது.
கொரியா நாட்டுக்கே உரித்தான ‘ஸ்டப்டூ குக்கும்பர்’ (வெள்ளரி), இறால் ‘காக்டெயில்’, அவகோடா ‘சாலட்’ போன்றவை தயார் செய்யப்பட்டு இருந்தன.
மேலும், ‘டாபினோய்ஸ் பொட்டேட்டோ’ (உருளைக்கிழங்கு), வேக வைக்கப்பட்ட ‘பிரோகோலினி’ (காய்), சிவப்பு ஒயின், ‘யாங்ஜூ பிரைட் ரைஸ்’, ‘ஜோ சில்லி சாஸ்’, ‘பச்சைப் பட்டாணி’, ‘முட்டை’ போன்றவை கண்ணைக் கவரும் வகையில் சமைக்கப்பட்டு இருந்தன.
சாப்பிட்டு முடித்த பின், ஐஸ்க்ரீம் வழங்குவதற்காக, ‘டார்க் சாக்லேட் டார்ட்லெட்’, ‘ஹாகென் டாஸ் வெணிலா ஐஸ்கிரீம் வித் செரி’, ‘ட்ரோபிஜெனி’ என்ற பிரெஞ்சு ஐஸ்க்ரீம் போன்றவை வைக்கப்பட்டிருந்தது.