சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன.13) பவுனுக்கு ரூ.200 என உயர்ந்து ஒரு பவுன் ரூ.58,720 என விற்பனை. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.59,000-னை நெருங்கும் சூழல் எழுந்துள்ளது.
உலக அளவில் தங்கம் அதிகம் வாங்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழலை பொறுத்து இந்தியாவின் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
5 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1000 வரை ஏறியுள்ளது. பண்டிகை காலம் என்பதாலும் விலை ஏற்றம். அமெரிக்க பொருளாதார புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளதாலும், ட்ரம்ப் பதவியேற்பால் டாலர் மதிப்பு இன்னமும் வலுப்பெறும் என்பதாலும் தங்கம் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுவதாலும் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.
கடைசியாக கடந்த அக்டோபரில் தங்கம் விலை பவுன் ரூ.59,640-க்கு விற்பனையானதே உச்சமாக இருந்த நிலையில் மீண்டும் அதையே நோக்கி தங்கம் விலை பயணிக்கிறது என்று கூறலாம்.
இந்த சூழலில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,340-க்கும், பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு பவுன் ரூ.58,720-க்கும் விற்பனை. வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து 102 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.