EBM News Tamil
Leading News Portal in Tamil

பழைய கார்களுக்கான ஜிஎஸ்டி 18% ஆக உயர்வு: கவுன்சில் கூட்டத்துக்கு பிறகு நிர்மலா சீதாராமன் தகவல் | GST on old cars raised to 18 percent finance minister union Nirmala Sitharaman


ஜெய்சல்மர்: பழைய கார்களுக்கான ஜிஎஸ்டி வரி 12-ல் இருந்து 18% ஆக உயர்த்தப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 55-வது கூட்டம் நேற்று நடந்தது. இதில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, கோவா, ஹரியானா, ஜம்மு காஷ்மீர், மேகாலயா, ஒடிசா மாநில முதல்வர்கள், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு உட்பட பல்வேறு மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

செறிவூட்டப்பட்ட அரிசி மீதான வரி 18-ல் இருந்து 5% ஆக குறைக்கப்படும். ஜீன் தெரபிக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்படும். பாதுகாப்பு துறையில் தரை யில் இருந்து தொலைதூர வான் இலக்கை தாக்கும் ஏவுகணை அமைப்புக்கான உப கரணம், மென்பொருளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.

பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மூலம் விற்கப்படும் பழைய மின்சார மற்றும் சிறிய வகை (1,200 சிசிக்கு உட்பட்ட) பெட்ரோல், டீசல் உள்ளிட்ட கார்களுக்கான வரி 12-ல் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்படும். பழைய கார்களை விற்கும்போது கிடைக்கும் லாப தொகைக்கு மட்டும் இந்த வரி விதிக்கப்படும். 1,200 சிசிக்கு அதிகமான கார்களுக்கு ஏற்கெனவே 18% வரி விதிக்கப்படுகிறது. அதே நேரம், தனி நபர்களுக்கு இடையே விற்கப்படும் கார் களுக்கு இது பொருந்தாது.

50% பிளை ஆஷ் மூலம் தயாரிக்கப்பட்ட ஏசிசி பிளாக் குகளுக்கான வரி 18-ல் இருந்து 12% ஆக குறைக்கப்படும். விமான எரிபொருளை (ஏடிஎப்) ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர மாநில அரசுகள் ன விரும்பவில்லை. எனவே, இதுகுறித்தும் உணவுப் ன பொருள் விநியோகம் செய்யும் செயலிகளுக்கு வரிவிதிப்பது குறித்தும் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. ஆயுள், மருத்துவ காப்பீடு தவணைக்கு வரி விலக்கு அளிப்பது அல்லது வரியை குறைப்பது தொடர்பாக காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் (ஐஆர்டிஏ) உள்ளிட்ட அமைப்புகளின் கருத்துக்காக காத்திருக்கிறோம். எனவே, இதுகுறித்த முடிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.