EBM News Tamil
Leading News Portal in Tamil

தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 உயர்வு | Gold rate sees high after a week


சென்னை: கடந்த வாரம் முழுவதும் விலை குறைந்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தங்கம் விலை இந்த வாரத்தின் முதல் நாளான இன்று பவுனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று (நவ.18) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ,60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,995-க்கு விற்பனையாகிறது. மீண்டும் கிராம் ரூ.7000 என்ற நிலையை நெருங்கியுள்ளது. பவுனுக்கு ரூ.480 அதிகரித்து ஒரு பவுன் ரூ.55.960-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.99-க்கே விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தீபாவளி நாளில் (அக்.31) ஒரு பவுன் ரூ. 59,640 என்ற வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது. இந்நிலையில், கடந்த 14-ம் தேதி பவுனுக்கு ரூ.880 குறைந்து, ஒரு பவுன் ரூ.55,480-க்கு விற்கப்பட்டது. அதன் பின்னர் தங்கம் விலை தொடர்ச்சியாக குறைந்து வருவது நகை வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த வாரம் முழுவதும் விலை குறைந்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தங்கம் விலை இந்த வாரத்தின் முதல் நாளான இன்று பவுனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது.