EBM News Tamil
Leading News Portal in Tamil

சில்லறை முதலீட்டாளர்கள் எப் அண்ட் ஓ வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம்: என்எஸ்இ தலைவர் எச்சரிக்கை | Retail investors should avoid FnO trading: NSE chief


புதுடெல்லி: சில்லறை முதலீட்டாளர்கள் எப் அண்ட் ஓ வர்த்தகத்தில் ஈடுபவதை தவிர்க்க வேண்டும் என என்எஸ்இ தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) தலைவர் ஆஷிஷ் குமார் சவுஹான் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது, “பங்குச் சந்தையில் எப் அண்ட் ஓ வர்த்தகம் அதிக லாபம் தரக்கூடியதாக இருப்பதால், இந்த வர்த்தகத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஆனால் இதுபற்றி பற்றி நன்கு தெரிந்தவர்கள் மட்டும்தான் இதுதொடர்பான வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும். எப் அண்ட் ஓ பற்றிய புரிதல் இல்லாத சில்லறை முதலீட்டாளர்கள் இதில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். மாறாக பரஸ்பர நிதி திட்டங்கள் மூலம் பங்குகளில் முதலீடு செய்யலாம்” என்றார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் ஆகியோரும் எப் அண்ட் ஓ வர்த்தகத்தில் சில்லறை முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் இடர்களை சமீபத்தில் சுட்டிக்காட்டி இருந்தனர்.