சென்னை: வாபக் நிறுவனத்தின் நிகர லாபம் நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.50 கோடியாக உயர்ந்துள்ளது.
இது முந்தைய நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில், இந்நிறுவனம் ஈட்டிய நிகர லாபத்தை விட 67 சதவீதம் அதிகம் ஆகும். 2022-23 நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாம் காலாண்டில் இந்நிறுவனம் ரூ.30 கோடி லாபம் ஈட்டியது.
நிறுவனத்தின் வருவாய் நடப்பு நிதி ஆண்டில் முதல் காலாண்டில் ரூ.553 கோடியாக உள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்ட வாபக் நிறுவனம், நீர் மேலாண்மை தொழில்நுட்பத்தில் செயல்பட்டு வருகிறது.