சூப்பர்… கொரோனா வைரஸ் பாதித்த நாடுகளுக்கு ஓடி ஓடி உதவும் பிரபல நிறுவனத்தின் சிஇஓ… யார் தெரியுமா?
கொரோனா வைரஸ் பாதித்த நாடுகளுக்கு, பிரபல நிறுவனத்தின் சிஇஓ ஒருவர் ஓடி ஓடி உதவி வருகிறார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம். கோவிட்-19 வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த இது, சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவ தொடங்கியதாக நம்பப்படுகிறது. சீனா தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருந்தாலும், இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஈரான் போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கோவிட்-19 வைரஸ் வேகமாக பரவி வருவதால், உலகின் பல்வேறு நாடுகளிலும், மருத்துவ உபகரணங்களின் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக அனைத்து நாடுகளுக்கும் வென்லேட்டர்கள்தான் மிக அதிக அளவில் தேவைப்படுகின்றன. நோயாளிகளின் சுவாச மண்டலத்தை கோவிட்-19 வைரஸ் தாக்குவதால், வென்டிலேட்டர்களின் தேவை இன்றியமையாததாக உள்ளது.
எனவே வென்டிலேட்டர்களை தயாரித்து வழங்கும்படி ஆட்டோமொபைல் நிறுவனங்களை உலகின் பல்வேறு நாடுகளின் அரசுகளும் வலியுறுத்தியுள்ளன. கோவிட்-19 வைரஸ் எதிரொலியால் தற்போது வாகனங்களின் விற்பனை மிக கடுமையாக சரிவடைந்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதில்லை.
இதனால் வாகனங்களின் விற்பனை வீழ்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அதே சமயம் வாகன தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன. வாகனங்களின் விற்பனை வீழ்ச்சியாலும், கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசுகள் விடுத்த கோரிக்கையை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஏற்று கொண்டுள்ளன.
எனவே வாகனங்களின் உற்பத்தி நடைபெற்ற தொழிற்சாலைகளில் வென்டிலேட்டர்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. டெஸ்லா, ஃபோர்டு மற்றும் ஜென்ரல் மோட்டார்ஸ் என உலகின் முன்னணி வாகன நிறுவனங்கள், வென்டிலேட்டர் தயாரிப்பு பணிகளில் களமிறங்கியுள்ளன. இந்த சூழலில் வென்டிலேட்டர்களை வழங்கும்படி எலான் மஸ்க்கிடம் உக்ரைன் கேட்டுள்ளது.