EBM News Tamil
Leading News Portal in Tamil

அந்நிய நிறுவனங்களுக்கு சாதகமானதா இ-காமர்ஸ் கொள்கை.. சில்லறை வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பு!

அமேசான், பிளிப்காட் நிறுவனங்களின் சிறப்புத் தள்ளுபடித் திட்டங்களை முடிவு கொண்டுவரும் வகையில் தயாரிக்கப்பட்ட மின் வணிக வரைவு கொள்கையை, இன்னும் 10 நாட்களுக்கு வெளியிட முடிவு செய்துள்ள நிலையில், அதில் சேர்க்கப்பட்டுள்ள வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கான பிரிவுகளுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையிலான குழு, வரைவுத் திட்டம் தொடர்பாக அகில இந்திய வர்த்தகக் கூட்டமைப்புடன் நேற்று ஆலோசனை நடத்தியது.
ஓலாவுக்குச் சாதகம்
மத்திய அரசு தயாரித்துள்ள வரைவு திட்டத்துக்குப் பெரிய வணிகர்களும், வர்த்தக அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஓலா மற்றும் பே.டி.எம் உள்ளிட்ட நிறுவனங்களுக்குச் சாதகமான அம்சங்கள் இடம் பெற்றுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அந்நிய நேரடி முதலீடு தொடர்பான விதிமுறைகள் பாதகமான அம்சமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்

வியாபாரிகள் கொந்தளிப்பு
மத்திய அரசின் வரைவுத் திட்டம் லட்சக்கணக்கான சிறு வியாபாரிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆதலால் சரக்கு அடிப்படையிலான விற்பனையில் கொண்டுவரப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு இந்திய வர்த்தகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வியாபாரிகள் கொந்தளிப்பு மத்திய
அரசின் வரைவுத் திட்டம் லட்சக்கணக்கான சிறு வியாபாரிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆதலால் சரக்கு அடிப்படையிலான விற்பனையில் கொண்டுவரப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு இந்திய வர்த்தகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வரிவிதிப்புகள்
அந்நிய நேரடி முதலீடு தொடர்பாக நடப்பில் உள்ள விதிமுறைகள் படி செயல்படுத்தப்பட்டு வரும் வரி விதிப்புகள் சில்லறை வர்த்தகத்தில் பாதிப்பை உருவாக்கியுள்ளதாகவும், அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு இது சாதகமாக இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
நிவாரணம் இல்லை
இந்தியாவுக்குள் எத்தனை மின் வணிக நிறுவனங்கள் செயல்படுகிறது என்பது அரசுக்குச் சரியாகத் தெரியவில்லை. நாங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் கொடுத்த முறையீடுகளுக்கு நிவாரணமோ, பதிலோ இதுவரை அளிக்கவில்லை என அகில இந்திய மின் வணிகச் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
தீர்வு கிடையாது
தயாரிப்புகளின் தரம் மற்றும் மின் வணிக நிறுவனங்களின் சேவை தொடர்பாகச் சில்லறை வர்த்தகர்கள் பல்வேறு புகார்களை அளித்துள்ளனர். ஆனால் சம்பந்தப்பட்ட அரசுத்துறைகள் இதுவரை எந்தத் தீர்வையும் வழங்கவில்லை என்பது பெரிய குறையாக உள்ளது

பதிவு கட்டாயம்
மின்னணு வணிகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ள அரசு டிஜிட்டல் முறையான அனைத்து வர்த்தகங்களும் மின் வணிக முறைப்படி பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.