EBM News Tamil
Leading News Portal in Tamil

ஆசிய மோட்டார் பந்தயம் அபாரம்: ஆஸி. வீரர் அபாரம்

எப்ஐஎம் ஆசிய ரோட் ரேஸிங் மோட்டார் சாம்பியன்ஷிப் போட்டி யில் 4-வது சுற்றில் ஆஸ்திரேலிய வீரர் அந்தோணி வெஸ்ட் வெற்றி கண்டார்.
சென்னையை அடுத்த இருங் காட்டுக்கோட்டையில் அமைந் துள்ள எம்எம்ஆர்டி மோட்டார் பந்தய மைதானத்தில் 4-வது சுற்றுப் போட்டிகள் நேற்று நடைபெற்றன.
இதில் 600 சிசி பிரிவில் 37 வயதான அந்தோணி வெஸ்ட் முதலிடம் பிடித்து அசத்தினார். இந்த சீசனில் அவர் பெற்ற 4-வது வெற்றியாகும் இது. இந்த பந்தயத்தில் ஜப்பானின் தோமோயோஷி கோயாமா 2-வது இடத்தையும், தைகா ஹடா 3-வது இடத்தையும் பிடித்தனர்.
250 சிசி பிரிவில் இந்தோனேசிய வீரர் ரபித் தோபான் சுசிப்டோ முதலிடத்தையும், முகமது பட்லி 2-வது இடத்தையும் பிடித்தனர். தாய்லாந்து வீரர் அனுபப் சர்மூன் 3-வது இடம் பிடித்தார். இந்தப் போட்டியில் இந்திய வீரர் ராஜீவ் சேத்து, அனிஷ் தாமோதர ஷெட்டி ஆகியோர் முறையே 16, 19-வது இடங்களைப் பெற்றனர்.
150 சிசி பிரிவில் மலேசிய வீரர்கள் அகமது பஷ்லி ஷாம் முதலிடத்தையும், முகமது ஹெல்மி அஸ்மாம் 2-வது இடத்தை யும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 14 வயது சிறுவன் டிராவிஸ் ஹால் 3-வது இடத்தையும் பிடித்தனர்.
இடமிட்சு ஹோண்டா இந்தியா பிரிவு முதல் பந்தயத்தில் பெங்களூரு வீரர் அபிஷேக் வாசுதேவ் முதலிடமும், கோயம் புத்தூரின் செந்தில் குமார் 2-வது இடமும், சென்னையின் அரவிந்த் பாலசுப்பிரமணியம் 3-வது இடத்தையும் பிடித்தனர்.
டிவிஎஸ் ஒன்-மேக் சாம்பியன் ஷிப் பிரிவு முதல் பந்தயத்தில் சென்னை வீரர் விவேக் பிள்ளை முதலிடமும், தீபக் ரவிக்குமார் 2-வது இடம் பிடித்தனர். ஹைதராபாதின் பெட்டு ஹர்ஷா 3-வது இடத்தையும் பிடித் தனர்.