`ஏர் இந்தியா பங்குவிலக்கலில் மத்திய அரசு உறுதி ’
ஏர் இந்தியாவின் 76 சதவீத பங்கு விலக்கல் வெற்றி அடையவில்லை. இருந்தாலும் பங்கு விலக்கலில் அரசு உறுதியாக இருக்கிறது. மாற்று வழிகள் குறித்து ஆராய்ந்து வருவதாக மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.
முந்தைய நடைமுறையில் யாரும் கேட்கவில்லை என்பதற்காக, இந்த திட்டம் கைவிடப்படவில்லை. அடுத்தகட்ட வாய்ப்பு குறித்து ஆராய்ந்து வருகிறோம். சந்தை சூழ்நிலைக்கு ஏற்ப நாங்கள் திட்டங்களை மாற்றி அமைப்போம். ஏர் இந்தியா பங்கு விலக்கலில் அரசு உறுதியாக இருக்கிறது என ஜெயந்த் சின்ஹா கூறினார்.
திங்கள் கிழமை நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஏர் இந்தியா பங்கு விலக்கல் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது மாற்று வழிகள் ஆராயப்பட்டு வருவதாக ஜெயந்த் சின்ஹா கூறியிருக்கிறார்.