EBM News Tamil
Leading News Portal in Tamil

புதுச்சேரியில் ஊரடங்கை மீறியதற்காக இதுவரை சுமார் 2000 பேர் மீது வழக்கு.. 12 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்…!

கொரோனா காரணமாக மதியம் ஒரு மணிக்கு மேல் புதுச்சேரியில் வாகனங்களுக்கு அனுமதியில்லை. இதனால் முக்கிய சந்திப்புகளில் வரும் வாகனங்களை போலீசார் சோதனையிடுகின்றனர்.

புதுச்சேரியில் ஊரடங்கை மீறியதற்காக இதுவரை 1984 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 12,091 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சாலையில் தேவையின்றி சுற்றிய 863 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று ஒரு நாள் மட்டும் 78 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 569 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருண் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.