EBM News Tamil
Leading News Portal in Tamil

பாகிஸ்தானில் தடை உத்தரவையும் மீறி மசூதிகளில் குவியும் மக்கள்: கொரோனா தடுப்புப் பணியில் சிரமம்

பாகிஸ்தானில் அரசு தடை உத்தரவையும் மீறி மசூதிகளில் மக்கள் குவிந்து வருவதால் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது.

உலகிலுள்ள நாடுகள் அனைத்தும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. இதுவரையில் பாகிஸ்தானில் கொரோனா வைரஸால் 5,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 93 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில், மத்திய பாகிஸ்தானிலுள்ள முல்தான் நகரிலுள்ள மசூதிக்கு தினமும் 20-க்கும் மேற்பட்டவர்கள் சென்று தொழுகை நடத்திவருகின்னறனர்.

இதுகுறித்து தெரிவித்த மசூதிக்குச் செல்லும் ஷபிர் துரானி, ‘மேற்கத்திய நாடுகளில் கொரோனா பரவுவது போல எங்களுக்கு கொரோனா பரவாது என்உற தொழுகையை வழிநடத்தும் எங்கள் மதக்குருக்கள் தெரிவித்தனர். நாங்கள் நாளைக்கு ஐந்து முறை கைகளையும் முகத்தையும் கழுவுகிறோம். அதனால், நாங்கள் கவலைப் படத் தேவையில்லை. கடவுள் எங்களுடன் இருக்கிறார். இதுகுறித்து தெரிவித்த இம்ரான் கானின் சிறப்பு உதவியாளர் மிர்சா சாசத் அக்பர், ‘பாகிஸ்தானில் பல மக்களுக்கு மதமும், வழிபாடும் உணர்வுப்பூர்வமான ஒன்று. அதனால், அரசு அந்த விவகாரத்தை மிகவும் கவனமாகக் கையாள்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் கொரோனா பரவியதில் 60 சதவீதத்துக்கு மேலானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று திரும்பியவர்களுக்கு தப்லீக் ஜமாத்தைப் பின்பற்றுபவர்களுக்கும்தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.