EBM News Tamil
Leading News Portal in Tamil

மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிற்பபு அம்சங்கள் | moto g67 power smartphone launched in india price specs


சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

அந்த வகையில் மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் இப்போது அறிமுகமாகி உள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ, ஸ்மார்ட் வாட்டர் டெக்னாலஜி, டால்பி ஆடம்ஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர் உள்ளிட்டவை இந்த போனில் இடம்பெற்றுள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள்:

  • 6.7 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே
  • ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
  • ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜெனரேஷன் 2 சிப்செட்
  • 50 + 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்கத்தில் உள்ள கேமரா
  • 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 8ஜிபி ரேம்
  • 128ஜிபி ஸ்டோரேஜ்
  • 7000 mAh பேட்டரி
  • 30 வாட்ஸ் சார்ஜிங் ஸ்பீடு
  • 5ஜி நெட்வொர்க்
  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
  • இந்த போனின் விலை ரூ.15,999 முதல் தொடங்குகிறது