EBM News Tamil
Leading News Portal in Tamil

பட்ஜெட் விலையில் லாவா ‘ஷார்க் 2’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன? | lava shark 2 smartphone launched in india at budget price


சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா ‘ஷார்க் 2’ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் மொபைல் போன், ஸ்மார்ட்போன் உள்ளிட்டவற்றை இந்த நிறுவனம் தயாரித்து, விற்பனை செய்து வருகிறது.

அந்த வகையில் இப்போது இந்திய சந்தையில் லாவா ஷார்க் 2 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. கடந்த மே மாதம் லாவா ஷார்க் போன் அறிமுகமாகி இருந்தது. இப்போது அதன் மேம்படுத்தப்பட்ட அடுத்த வெர்ஷன் அறிமுகமாகி உள்ளது.

லாவா ஷார்க் 2 ஸ்மார்போட்ன்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

  • 6.75 இன்ச் ஹெச்டி+ நாட்ச் டிஸ்பிளே
  • ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
  • இரண்டு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்
  • ஆக்டா கோர் Unisoc T7250 ப்ராசஸர்
  • 4ஜிபி ரேம்
  • 64ஜிபி ஸ்டோரேஜ்
  • பின்பக்கத்தில் 3 கேமரா இடம்பெற்றுள்ளது. அதில் பிரதான கேமரா 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது.
  • 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
  • 4ஜி நெட்வொர்க்
  • 5,000 mAh பேட்டரி
  • 10 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
  • டைப்-சி யுஎஸ்பி சார்ஜர்
  • இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
  • இந்த போனின் விலை ரூ.6,999 என அறிவிக்கப்பட்டுள்ளது