EBM News Tamil
Leading News Portal in Tamil

சத்தீஸ்கரில் பழங்குடியின சிறுவர்களிடம் செல்போனில் கார்ட்டூன்களை காட்டிய சிஆர்பிஎப் வீரர்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் | CRPF jawan shows cartoon to Chhattisgarh tribal kids on mobile phone viral video


ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர் வனப்​பகு​தி​யில் வசிக்​கும் பழங்​குடி​யின சிறு​வர்​களிடம், சிஆர்​பிஎப் வீரர் ஒரு​வர் தனது செல்​போனில் கார்ட்​டூன்​களை காட்​டிய வீடியோ வைரலாக பரவி வரு​கிறது.

நக்​சல்​கள் ஆதிக்​கம் நிறைந்த மாநிலங்​களில் ஒன்று சத்​தீஸ்​கர். வரும் 2026-ம் ஆண்டு மார்ச் மாதத்​துக்​குள் நக்​சல்​களை முற்​றி​லும் ஒழிக்க மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. இது தொடர்​பாக பல்​வேறு திட்​டங்​களை சம்​பந்​தப்​பட்ட மாநில அரசுகளு​டன் இணைந்து செயல்​படுத்தி வரு​கிறது. குறிப்​பாக சரணடை​யும் நக்​சல்​கள் கண்​ணி​ய​மான வாழ்க்​கை​யைத் தொடங்​கு​வதற்​கான உதவி​கள் வழங்​கப்​படு​கின்​றன.

இந்த சூழ்​நிலை​யில், அம்​மாநிலத்​தில் ஒரு வீடியோ சமூக வலை​தளங்​களில் வேக​மாக பகிரப்​பட்டு வரு​கிறது. அதில், சிஆர்​பிஎப் வீரர் ஒரு​வர் தனது செல்​போனில் கார்ட்​டூன்​களை காட்​டு​கிறார். அதைப் பார்த்த சிறு​வர்​கள் புன்​னகைக்​கின்​றனர். இந்த வீடியோ காட்சி பார்ப்​பவர்​களின் இதயத்​தைத் தொடு​வ​தாக அமைந்​துள்​ளது. அத்​துடன் சிறு​வர்​களுக்கு கல்வி எவ்​வளவு முக்​கி​யம் என்​பதை உணர்த்​து​வ​தாக​வும் உள்​ளது.

இந்த வீடியோவைப் பகிர்ந்த ஒரு​வர், “வீடியோவைப் பாருங்​கள். அடர்ந்த வனப்​பகு​தி​யில் வசிக்​கும் அந்​தக் குழந்​தைகள் முதல் முறை​யாக காட்​டூனைப் பார்க்​கின்​றனர். நக்​சல்​களின் ஆதிக்​கம் காரண​மாக, இவர்​கள் குழந்​தைப்​பருவ அனுபவத்​தை​யும் கல்​வியை​யும் தவற​விட்​டிருப்​பது என்னை வருத்​தத்​தில் ஆழ்த்தி உள்​ளது. இப்​போது அவர்​களுக்கு தேவை​யான அனைத்து வசதி​களும் கிடைக்​கும் என நம்​பு​கிறேன்​’’ என கூறி​யுள்​ளார்​.