EBM News Tamil
Leading News Portal in Tamil

பள்ளியில் 38 ஆண்டு மணி அடித்த ஊழியருக்கு பிரியாவிடை! | Farewell to employee who rang the school bell for 38 years


பெங்களூரு: பெங்​களூரு​வில் உள்ள பிஷப் காட்​டன் பெண்​கள் பள்ளி 100 ஆண்​டு​களுக்​கும் மேலாக இயங்கி வரு​கிறது. தமிழக முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா இந்தப் பள்​ளி​யில் தனது தொடக்க கல்​வியை பயின்​றது குறிப்​பிடத்​தக்​கது.

இந்தப் பள்​ளி​யில் தாஸ் (60) என்​பவர் கடந்த 38 ஆண்​டு​களாக மணி அடிக்​கும் ஊழிய​ராக பணி​யாற்றி வந்​தார். எலக்ட்​ரிக் மணி அறி​முக​மான பிறகும் இந்தப் பள்​ளி​யில், பழைய மணி அடிக்​கும் முறையே தொடர்ந்​தது. மணி அடிக்​கும் ஊழிய​ரான தாஸ் நேரத்தை துல்​லிய​மாகப் பார்த்​து, 38 ஆண்​டு​களும் நேர்த்​தி​யாக தனது பணியை செய்து வந்​தார்.

இந்​நிலை​யில் கடந்த வெள்​ளிக்​கிழமை அவரது கடைசி பணி நாளின் போது மாலை 4 மணிக்கு கடைசி​யாக மணி அடித்​தார். அப்​போது பள்​ளி​யின் அனைத்து மாணவி​களும் ஆசிரியர்​களும் அவரை சூழ்ந்​த​வாறு நின்று உற்​சாக​மாக கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்​தனர். இந்த வீடியோ சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி வைரலாகி​யுள்​ளது.

இதனை அமி குட்டி என்ற முன்​னாள் மாணவி தனது இன்​ஸ்​டாகி​ராம் பக்​கத்​தில் பகிர்ந்​துள்​ளார். அதில், ‘‘தாஸ் அங்​கிள் கடந்த 38 ஆண்​டு​களாக பள்​ளி​யில் மணி அடித்து வந்​தார். ஒவ்​வொரு நாள் காலை​யும் அவர் மணி அடிக்​கும்​போது எங்​கள் அனை​வரின் வகுப்​பு​களும் தொடங்​கும். மாலை​யில் மணி அடிக்​கும் போது உற்​சாக​மாக பள்​ளியை விட்டு வெளியே வரு​வோம்.

தாஸ் அங்​கிள் கடைசி​யாக மணியை அடித்​த​போது கண்​கள் கலங்​கி​விட்​டன’’ என குறிப்​பிட்​டார். இந்த வீடியோவை சுமார் 4 கோடி பேர் பார்த்த நிலை​யில், லட்​சக்​கணக்​கானோர்​ பகிர்ந்​துள்​ளனர்​.