EBM News Tamil
Leading News Portal in Tamil

‘புற்​று​நோய் முற்​றிய​தால் நேரம் கழிகிறது; இதுதான் எனக்கு கடைசி தீபாவளி நண்​பர்​களே…’ – 21 வயது இளைஞர் உருக்​க​மான பதிவு | 21 year old cancer patient post on reddit saying my last diwali


புதுடெல்லி: “கடைசி​யில் புற்​று​நோய் வெற்றி பெற்று விட்​டது. இது எனது கடைசி தீபாவளி நண்​பர்​களே” என்று 21 வயது இளைஞர் வெளி​ யிட்ட பதிவு சமூக வலை​தளங்​களில் உருக்​கத்தை ஏற்​படுத்தி உள்​ளது.

கடந்த 2023-ம் ஆண்டு 19 வயதுள்ள ஒரு​வருக்கு பெருங்​குடலில் புற்​று​நோய் பாதிப்பு இருப்​பது கண்​டறியப்​பட்​டுள்​ளது. அது முற்​றிய நிலை​யாக 4-வது நிலைக்கு சென்​றுள்​ளது. மருத்​து​வர்​கள் கீமோதெரபி உட்பட அனைத்து வித​மான சிகிச்​சைகளும் அளித்​துள்​ளனர். எனினும், புற்​று​நோய் முற்​றிய​தால் ஒன்​றும் செய்ய முடியவில்​லை. அவர் ஓராண்டு உயிர் வாழ்​வதே சிரமம் என்று கைவிரித்துள்​ளனர். இதுகுறித்து தற்​போது 21 வயதாகும் அந்த இளைஞர், ‘r/TwentiesIndia subreddit’ என்ற சமூக வலைதளத்​தில் தன்​னுடைய வலி, கனவு​கள் என உருக்​கமான பதிவு ஒன்றை வெளி​யிட்​டுள்​ளார். அதில் அவர் கூறி​யிருப்​ப​தாவது:

விரை​வில் தீபாவளி வரு​கிறது. தெருக்​கள் ஏற்​கெனவே விளக்​கு​களால் ஜொலிக்​கின்​றன. அவற்றை நான் கடைசி முறை​யாக பார்க்​கிறேன் என்​பதை நினைக்​கும்​போது மிக​வும் கடின​மாக இருக்​கிறது. இந்த பண்​டிகை கால விளக்​கு​கள், சந்​தோஷம், சிரிப்​பு, சத்​தம் என எல்​லா​வற்​றை​யும் இழக்க போகிறேன்.

நான் சத்​தமில்​லாமல் சிறிது சிறி​தாக சரிந்து கொண்​டிருக்​கும் போது, வாழ்க்கை தொடர்ந்து நகர்வது விசித்​திர​மாக உள்​ளது. அடுத்த ஆண்டு என்​னுடைய இடத்​தில் வேறு யாரோ ஒரு​வர் விளக்கு ஏற்​று​வார். நான் வெறும் நினை​வாக மட்​டுமே இருப்​பேன்.

எனக்கு சுற்​றுலா செல்​வது பிடிக்​கும். தனி​யாக நிறு​வனம் தொடங்க ஆசைப்​பட்​டேன். செல்ல நாய் வளர்க்க நினைத்​தேன். ஆனால், எனது நேரம் கழிந்து கொண்​டிருப்​பது நினை​வுக்கு வரு​கிறது. அதனால் அந்த எண்​ணங்​கள் மங்​கி​விடு​கின்​றன. நான் வீட்​டில்​தான் இருக்​கிறேன். எனது பெற்​றோரின் முகத்​தில் சோகத்​தைப் பார்க்​கிறேன். இவற்றை எல்​லாம் நான் ஏன் எழுதுகிறேன் என்று கூட எனக்கு தெரிய​வில்​லை. அடுத்து என்ன நடக்​கிறதோ தெரி​யாது. அதில் நான் மறைந்து போவதற்கு முன்பு சத்​த​மாக சொல்​லி​விட்டு செல்​வதற்​காக இருக்​கலாம்.

இவ்​வாறு அந்த இளைஞர் கூறி​விட்டு கடைசி​யாக, “அதிச​யம் நடந்​தால்​…” என்று பதி​விட்​டுள்​ளார். அதை சமூக வலை​தளங்​களில் ஆயிரக்​கணக்​கானோர் பார்த்து வேதனை அடைந்​துள்​ளனர். ஏராள​மானோர் அவருக்காகப் பிரார்த்​தனை செய்​கின்​றனர். பலர் தங்​கள் வேதனையை வெளிப்​படுத்தி உள்​ளனர். பலர் அற்​புதம் நடக்​கட்​டும் என்று வாழ்த்தி உள்​ளனர். “தைரி​யமாக இருங்​கள் நண்​பா. இசை கேளுங்​கள். காலை​யில் நடைப​யிற்சி மேற்​கொள்​ளுங்​கள். பிடித்த உண்வை உட்​கொள்​ளுங்​கள். நம்​பிக்​கையை கைவி​டாதீர்​கள்​.

நீங்​கள்​ மிக​வும்​ தைரிய​மான இளைஞர்​… என்​றெல்​லாம்​ உற்​​சாகமூட்​டும்​ கருத்​துகளை சமூக வலை​தளங்​களில்​ பதி​விட்​டு வரு​கின்​றனர்​.