EBM News Tamil
Leading News Portal in Tamil

ஹெச்எம்டி நிறுவனத்தின் ‘டச் 4ஜி’ ஹைபிரிட் போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் | hmd touch 4g hybrid phone launched in india price specs


சென்னை: ஹெச்எம்டி நிறுவனம் இந்தியாவில் ‘டச் 4ஜி’ போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

பின்லாந்து நாட்டை சேர்ந்த ஹியூமன் மொபைல் டிவைசஸ் (ஹெச்எம்டி குளோபல்) நிறுவனம் மொபைல் போன்களை உற்பத்தி செய்து உலக அளவில் விற்பனை செய்து வருகிறது. கடந்த 2016 முதல் நோக்கியா பிராண்டில் ஸ்மார்ட்போன் மற்றும் ஃபீச்சர் போன்களை விற்பனை செய்து வந்தது இந்த நிறுவனம்.

கடந்த 2024 மார்ச் முதல் ஹெச்எம்டி நிறுவனம் அதன் பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது ஹெச்எம்டி நிறுவனம் ‘டச் 4ஜி’ எனும் போனை அறிமுகம் செய்துள்ளது. இதை ஹைபிரிட் போன் என ஹெச்எம்டி தெரிவித்துள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள்:

  • 3.2 இன்ச் டச் டிஸ்பிளே
  • கிளவுட் அடிப்படையிலான அப்ளிகேஷன்கள்
  • பிரத்யேக எஸ்ஓஎஸ் ஐஸ் கீ
  • எக்ஸ்பிரஸ் சாட் அப்ளிகேஷன் மூலம் 13 மொழிகளில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தள போன்களுக்கு ரியல் டைம் சாட் மற்றும் வீடியோ அழைப்பும் மேற்கொள்ளலாம்
  • பின்பக்கத்தில் 2 மெகாபிக்சல் கேமரா இடம்பெற்றுள்ளது
  • முன்பக்கம் விஜிஏ கேமரா உள்ளது
  • 2,000mAh பேட்டரி
  • டைப்-சி சார்ஜிங் போர்ட்
  • வயர் மற்றும் வயர்லெஸ் எஃப்.எம் சப்போர்ட்
  • அக்.9 முதல் இந்த போனின் விற்பனை தொடங்குகிறது
  • இதன் விலை ரூ.3,999
  • இரண்டு வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது