EBM News Tamil
Leading News Portal in Tamil

அரட்டையில் இணைந்தார் ஆனந்த் மஹிந்திரா | Anand Mahindra Downloads Arattai


புதுடெல்லி: வாட்ஸ் ஆப், டெலிகிராம் போல், இந்தியாவில் உருவாக்கப் பட்ட செயலி அரட்டை இதை சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு உருவாக்கியுள்ளார்.

இதை உருவாக்கிய மென் பொறியாளர்கள் எல்லாம் தென் காசியில் உள்ள ஸ்ரீதர் வேம்பு வின் நிறுவனத்தில் பணியாற் றுபவர்கள். இதில் வாடிக் கையாளர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்த அரட்டை செயலியில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா இணைந்துள்ளார்.

இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஸ்ரீதர் வேம்புவின் அரட்டை செயலியை பெருமை யுடன் பதிவிறக்கம் செய்துள் ளேன்” என்றார். இதற்கு நன்றி தெரிவித்துள்ள ஸ்ரீதர் வேம்பு, ஆனந்த் மஹிந்திராவின் பாராட்டு, எங்களுக்கு அதிக உறுதியை அளிக்கிறது” என கூறி நன்றி தெரிவித்துள்ளார்.