வலையில் சிக்கிய பல டன் பெரும்பாறை மீன்கள் – தேவனாம்பட்டினம் மீனவர்கள் இன்ப அதிர்ச்சி | Caught Tons of Perumparai Fish on Net: Devanampattinam Fishermen Happy
கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக பல டன் எடையுள்ள மீன்கள் ஒரே இடத்தில் கிடைத்தது. ‘பெரும்பாறை’ எனப்படும் இவ்வகை மீன்கள் அதிக அளவில் கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பிடித்த மீன்களை அங்கிருந்து சிறிய படகுகள் மூலம் கரைக்கு நேற்று மதியத்துக்கு மேல் கொண்டு வந்தனர். ஒவ்வொரு மீனும் 4 கிலோ முதல் 20 கிலோ வரை இருந்தது. வழக்கமாக மீன் பிடிக்கச் செல்லும் போது ஒரு டன் அளவிலான மீன் மட்டுமே கிடைக்கும் நிலையில், ஒவ்வொரு படகிலும் 40 டன்கள் வரை மீன்கள் கிடைத்துள்ளது.
ஏறக்குறைய 100 டன்களுக்கு மேல் மீன் கிடைத்துள்ளது .இந்த மீன்கள் வழக்கமாக ஒரு கிலோ ரூ.400 என விற்கப்படும் நிலையில், நேற்று கிலோ ரூ.200-க்கும், ரூ.180-க்கும் விற்கப்படது. இதனால் பொதுமக்களும், வியாபாரிகளும் குவிந்து இந்த பெரும்பாறை மீன்களைப் போட்டி போட்டு வாங்கி வருகின்றனர்.