EBM News Tamil
Leading News Portal in Tamil

படிக்காத மெசேஜ்களை சுருக்கமாக மாற்றி தரும் ‘மெட்டா ஏஐ’: வாட்ஸ்அப்பில் புதிய அம்சம் | Meta AI to summarize unread messages New feature in WhatsApp


மென்லோ பார்க்: வாட்ஸ்அப் மெசஞ்சரில் பயனர்கள் படிக்காத மெசேஜ்களை ‘மெட்டா ஏஐ’ மூலம் சுருக்கமாக மாற்றித் தரும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது மெட்டா. அது குறித்து விரிவாக பார்ப்போம்.

வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.

தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் வாட்ஸ்அப் மெசஞ்சரில் பயனர்கள் படிக்காமல் விடுத்த மெசேஜ்களை (Unread Messages) மெட்டா ஏஐ மூலம் சுருக்கி தரும் (Summarise) அம்சத்தை மெட்டா அறிமுகம் செய்துள்ளது.

இதன்மூலம் வாட்ஸ்அப் பயனர்கள் தங்களுக்கு வரும் பர்சனல் மற்றும் குரூப் மெசேஜ்களை படிக்காமல் இருந்தால் அதை மெட்டா ஏஐ சுருக்கமாக மாற்றி தரும். இதன் மூலம் நீண்ட டெக்ஸ்ட் மெசேஜ்களை நெடுநேரம் ஸ்க்ரோல் செய்து பயனர்கள் படிக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறது மெட்டா. அதுவும் செய்திக்குறிப்பு போல இது மாற்றப்பட்டு இருக்கும் என மெட்டா தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் மெசேஜ்களை மெட்டா ஏஐ எப்படி சுருக்கமாக மாற்றித் தருகிறது? – வாட்ஸ்அப் பயனர்கள் மெட்டா ஏஐ சாட்பாட்டுக்கு படிக்காத மெசேஜ்களை சுருக்கமாக மாற்றித் தரும்படி கட்டளையிட்டால் (Prompt) மட்டுமே மெட்டா ஏஐ அதை செய்யும். அதுவும் இதில் ஜெனரேட் செய்யும்படி கன்டென்ட் அனைத்தும் பிரைவேட்டாகவே இருக்கும். அது மெட்டா நிறுவனத்தின் சர்வர்கள் அல்லது வாட்ஸ்அப் சிஸ்டத்தில் ஸ்டோர் ஆகாது என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், மெட்டா ஏஐ மாடல்கள் கூட இந்த மெசேஜ்களை ஸ்டோர் செய்யாது என மெட்டா ஏஐ கூறியுள்ளது.

இந்த அம்சத்தை பயனர்கள் மேனுவலாக ‘சாட்’ செட்டிங்ஸில் ஆன் செய்தால் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதைக்கு இந்த அம்சம் அமெரிக்காவில் வாட்ஸ்அப் பயனர்களுக்கு அறிமுகமாகி உள்ளது. மேலும், ஆங்கில மொழியில் உள்ள மெசேஜ்களை மட்டுமே இப்போதைக்கு மெட்டா ஏஐ சுருக்கி தருகிறது. வரும் நாட்களில் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் பயனர்கள் இந்த அம்சத்தை பயன்படுத்தும் வகையில் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.