EBM News Tamil
Leading News Portal in Tamil

Poco F7 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன? | poco f7 5g smartphone launched in india price features


சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் போக்கோ எஃப்7 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

சீன தேசத்தை தலைமையிடமாக கொண்டு பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகின்ற நிறுவனம்தான் சியோமி. இதன் பிராண்டான போக்கோ கடந்த 2018-ல் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2021 முதல் இந்தியாவில் தங்களுக்கென பிரத்யேக லோகோ உடன் இயங்கி வரும் போக்கோ, பல்வேறு மாடல்களில் போன்களை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் இந்தியாவில் தற்போது போக்கோ எஃப்7 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இந்தியாவில் இந்த போன் 7,550mAh பேட்டரி உடன் வெளிவந்துள்ளது கவனிக்கத்தக்கது. வணிக ரீதியாக கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் இந்த பேட்டரி மிகப் பெரியது. இதே மாடல் போன் சர்வதேச சந்தையில் 6,500mAh பேட்டரி உடன் கிடைக்கிறது. இந்த போன் போக்கோ எஃப்6 மாடலின் அடுத்த மாடலாக வெளிவந்துள்ளது. இதன் சிப்செட்டும் ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. போக்கோ எஃப்7 சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

  • 6.83 இன்ச் pOLED டிஸ்பிளே
  • ஸ்னாப்டிராகன் 8s ஜெனரேஷன் 4 ப்ராஸஸர்
  • ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
  • 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா. அதோடு 8 மெகாபிக்சல் கொண்ட அல்ட்ரா வைட் லென்ஸ் கொண்ட கேமராவும் பின்பக்கம் உள்ளது
  • 20 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
  • மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
  • 12ஜிபி ரேம்
  • 256ஜிபி / 512ஜிபி ஸ்டோரேஜ்
  • 7,550mAh பேட்டரி
  • 90 வாட்ஸ் திறன் கொண்ட சார்ஜர் இந்த போனுடன் கிடைக்கிறது
  • 22.5 வாட்ஸ் ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம் கொண்டுள்ளது
  • 5ஜி நெட்வொர்க்
  • தூசி, தண்ணீரைத் தாங்கும் வகையில் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது
  • இந்த போனின் விலை ரூ.35,999
  • வரும் ஜூலை 1 முதல் விற்பனை தொடங்குகிறது. விலையில் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது